மகளிர் கட்டணமில்லா அரசு பேருந்தில் பெண்களை பார்த்ததும் அதிவேகமாக சென்ற அரசு பேருந்தை சிறைபிடித்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரை எச்சரித்த கிராம பெண்களின் வீடியோ சமூக வலைதளத்தில்

மகளிர் கட்டணமில்லா அரசு பேருந்தில் பெண்களை பார்த்ததும் அதிவேகமாக சென்ற அரசு பேருந்தை சிறைபிடித்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரை எச்சரித்த கிராம பெண்களின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரல்*
திருச்சுழி அருகே மகளிர் கட்டணமில்லா அரசு பேருந்தில் பெண்களை பார்த்ததும் அதிவேகமாக சென்ற அரசு பேருந்தை சிறைபிடித்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரை எச்சரித்த கிராம பெண்களின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் எங்களை பேருந்தில் ஏற்றினால் உங்கள் வீட்டு சொத்தா போயிருமா எனக் கேள்வி கேட்ட பெண்கள் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் இருந்து திருச்சுழி வழியாக காரைக்குளம் வழித்தடத்தில் TN67 NO630 எண் கொண்ட அரசு பேருந்து இயங்கி வருகிறது. இந்த அரசு பேருந்தை பள்ளி மாணவர்கள் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை காரைக்குளம் நோக்கி சென்ற அரசு பேருந்தை பள்ளிமடம் பேருந்து நிறுத்தத்தில் வேலைக்குச் செல்லும் பெண்கள் நிறுத்த முயன்ற பொழுது பெண்களுக்கு கட்டணம் இல்லை என்பதாலும், சாந்து தட்டு, மண்வெட்டி ஆகிய பொருட்கள் கொண்டு வந்ததாலும் ஓசி பயணத்தில் பொருள்களை ஏற்றி வரக்கூடாது அப்படி பொருட்களோடு ஏற வந்தால் பேருந்து நிற்காது என்றும் நீங்கள் எங்கு வேண்டுமானாலும் சென்று புகார் செய்யுங்கள் என ஓட்டுநர் மற்றும் நடத்துனர் அலட்சியமாக கூறி பேருந்தை நிறுத்தாமல் அதிவேகமாக சென்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து ஆத்திரம் அடைந்த பெண்கள் அதே பேருந்து காரைக்குளம் சென்று விட்டு மீண்டும் திரும்பி வந்த பொழுது ஊரணிப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகில் அரசு பேருந்தை சிறைபிடித்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரை உங்க வீட்டு சொத்தா போகிறது? ஏன் நிப்பாட்டாம போறீங்க என வெளுத்து வாங்கி கண்டிக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Next Story