விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ஆட்சியருடன் வாக்குவாதத்தை ஈடுபட்ட விவசாயிகள்
Virudhunagar King 24x7 |26 July 2024 2:02 PM GMT
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ஆட்சியருடன் வாக்குவாதத்தை ஈடுபட்ட விவசாயிகள்
விருதுநகரில் வட்டாட்சியர் விசாரணையில் நீர்வழிப்பாதை என கூறிய இடத்தை பட்டா நிலம் எனக் கூறிய மாவட்ட ஆட்சியர் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் ஜூலை மாதத்திற்கான விவசாயிகள குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர் தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் ஓ. அ நாராயணசாமி தலைமையில் விவசாயிகள் கலந்து கொண்டனர் விருதுநகர் மாவட்டத்தில் ஆமத்தூர் வருவாய் கிராமத்திலும் மீசலூர் வருவாய் கிராமத்திலும் வண்டிப் பாதை நீர்வழிப்பாதையை ஆக்கிரமித்து தனியார் நிறுவனம் ஆக்கிரமித்துக் கட்டிடம் இருப்பதன் காரணமாக நீர் வழி செல்ல முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்படுவதாகவும் இது குறித்து கடந்த இரண்டு ஆண்டுகளாக பலமுறை தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் மனு அளித்திருப்பதாகவும் தனியார் நிறுவனம் ஆக்கிரமித்த வண்டி பாதையின் காரணமாக சுமார் 600-க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலம் வைத்துள்ள விவசாயிகள் பாதிக்கப்படுவதாகவும் இது தொடர்பாக விசாரணைக்கு விவசாயிகள் விண்ணப்பித்ததாகவும் விசாரணையை மேற்கொண்ட விருதுநகர் வட்டாட்சியர் வண்டிப்பாதை நிலம் ஆக்கிரமிப்புக்கப்பட்டு இருப்பதை உறுதி செய்து அவற்றை அகற்ற அந்த தனியார் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி இருந்த நிலையில் அந்த தனியார் நிறுவனம் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் மேல்முறையீடு செய்ததன் காரணமாக மாவட்ட ஆட்சியர் அந்த நிலத்தை பட்டா நிலம் என கூறுவதாகவும் மாவட்ட ஆட்சியர் விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்படாமல் தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டினார் இதன் காரணமாக விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியருடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதன் காரணமாக அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் விவசாயிகளை நீதிமன்றத்திற்கு சென்று பார்த்துக் கொள்ளுங்கள் என கூறியதால் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்
Next Story