ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் பக்தர்கள் தரிசனம்..

ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் பக்தர்கள் தரிசனம்..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் குஞ்சு மாரியம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு பல்வேறு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் நடைபெற்று தொடர்ந்து ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மனுக்கு வெள்ளி காப்பு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து சென்றனர்.
Next Story