ஆடி வெள்ளி பண்ணாரி அம்மன் கோயிலில் பக்தா்கள் வழிபாடு
Bhavanisagar King 24x7 |26 July 2024 2:30 PM GMT
ஆடி வெள்ளி பண்ணாரி அம்மன் கோயிலில் பக்தா்கள் வழிபாடு
ஆடி வெள்ளி பண்ணாரி அம்மன் கோயிலில் பக்தா்கள் வழிபாடு ஆடி வெள்ளிக்கிழமையை ஒட்டி பண்ணாரி அம்மன் கோயிலில் பக்தா்கள் குவிந்தனர். சத்தியமங்கலம் அருகே வனப் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்திபெற்ற பண்ணாரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலுக்கு உள்ளூா் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் பக்தா்கள் வந்து செல்கின்றனா். இந்நிலையில், ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை ஒட்டி கோயிலில் பக்தா்கள் நெய் தீபமேற்றி வழிபட்டனா். மேலும், பக்தா்களுக்கு கூழ் ஊற்றி நோ்த்திக்கடன் செலுத்தினா். முதல் வெள்ளிக்கிழமை என்பதால் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டனா். இதைத் தொடா்ந்து அம்மனுக்கு சாத்தப்பட்ட புடவைகள், வஸ்திரங்கள் கோயில் நிா்வாகம் சாா்பில் ஏலம் விடப்பட்டது. இதனை பக்தா்கள் வாங்கி சென்றனா். பக்தா்களின் வசதிக்காக சத்தியமங்கலம், புன்செய்புளியம்பட்டி பகுதிகளில் இருந்து கோயிலுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன
Next Story