வேலூர் பேரூராட்சியில் மதுரை மண்டல பேரூராட்சிகளின் நிர்வாக பொறியாளர் ஆய்வு.
Paramathi Velur King 24x7 |26 July 2024 3:24 PM GMT
வேலூர் மற்றும் பொத்தனூர் பேரூராட்சிகளில் மதுரை மண்டல பேரூராட்சிகளின் நிர்வாக பொறியாளர் ஆய்வு நடத்தினார்.
பரமத்திவேலூர், ஜுலை. 26: பரமத்தி வேலூர் வட்டம், வேலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட சில வார்டு பகுதிகளை மதுரையைச் சேர்ந்த பேரூராட்சிகளின் நிர்வாக பொறியாளர் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். மதுரை மண்டல பேரூராட்சிகளின் நிர்வாக பொறியாளர் சாய்ராஜ் வேலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் தெருக்களில் கொட்டப்படும் குப்பைகள் சரியாக தரம் பிரித்து பணியாளர்களிடம் வழங்கப்படுகிறதா, தெருவிளக்குகள் சரியாக எரிகிறதா, கழிவறைகள் சரிவர பராமரிப்பு செய்யப்படுகிறதா என்பது குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஒவ்வொரு வார்டுகளிலும் எத்தனை வீதிகள் உள்ளது, ஒவ்வொரு வார்டுகளிலும் எத்தனை தூய்மை பணியாளர்கள் தூய்மைப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறித்தும் பேரூராட்சி நிர்வாகத்தினரிடம் கேட்டறிந்தார். ஆய்வுக்கு வந்த நிர்வாக பொறியாளர் சாய்ராஜை வேலூர் பேரூராட்சி நிர்வாகத்தினர் ஏற்கனவே சுத்தம் செய்யப்பட்ட இடங்களுக்கு மட்டுமே அழைத்துச் சென்று காண்பித்தனர். ஏராளமான குப்பைகள் கொட்டப்பட்டு தீவைத்து குப்பைகள் எரிந்து கொண்டிருந்த பகுதிகளுக்கு நிர்வாக பொறியாளரை பேரூராட்சி நிர்வாகத்தினர் அழைத்துச் செல்லவில்லை. அதனையடுத்து 17-வார்டு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் தினந்தோறும் கொட்டப்படும் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை அகற்றாமல் தீவைத்து எரிப்பதால் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன் மூச்சு திணறல் ஏற்படுவதாக குற்றம் சாட்டியதுடன் அப் பகுதியை நேரில் வந்து ஆய்வு செய்ய வேண்டும் என நிர்வாக பொறியாளரிடம் கோரிக்கை விடுத்தனர். அதனையடுத்து 17-வது வார்டு பகுதிக்கு சென்று அங்கு கொட்டப்பட்டுள்ள குப்பை மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து கொண்டிருப்பதை பார்த்தார் அதனையடுத்து 17-வது வார்டு பகுதிக்கு சென்று அங்கு கொட்டப்பட்டுள்ள குப்பை மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து கொண்டிருப்பதை பார்த்து பேரூராட்சி நிர்வாகத்தினரிடம் அப் பகுதியில் கொட்டப்பட்டு தீவைத்து எரிந்து கொண்டிருந்த குப்பைகளை உடனடியாக அகற்றவும், குப்பைகளை தினந்தோறும் உடனுக்குடன் அகற்ற வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இந்த நிலையில் விவசாயிகள் வேலூர் காவிரி பாலம் அருகே தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே வேலூர் பேரூராட்சி உட்பட்ட 18- வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை தினந்தோறும் கொட்டி வைத்தும், அந்த குப்பைகளுக்கு சிலர் அடிக்கடி தீ வைப்பதும் அந்த தீயை தீயணைப்பு துறையினர் அணைப்பதும் வாடிக்கையாகி வருகிறது. மேலும் பேரூராட்சி நிர்வாகம் சாக்கடை கழிவு நீரை நேரடியாக ராஜா வாய்க்காலில் விடப்படுவதால் வாய்காலில் பொதுமக்கள் குளிக்க முடியாமலும், விவசாயத்திற்கு தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு இருப்பதாகவும் குற்றம் சாட்டினர். மேலும் வேலூர் காவிரி பாலம் அருகே பேரூராட்சி நிர்வாகம் கொட்டியுள்ள பகுதியை நேரில் வந்து பார்வையிடுமாறு கோரிக்கை விடுத்தும் நிர்வாக பொறியாளர் சாய்ராஜ் அப் பகுதியை பார்வையிட வராததால் பொதுமக்களும், விவசாயிகளும் அதிர்ப்புயடைந்தனர். வேலூர் பேரூராட்சிக்கு ஆய்வுக்கு நிர்வாக பொறியாளர் பெயரளவிற்கு மட்டுமே ஆய்வு மேற்கொண்டதுடன் பேரூராட்சி நிர்வாகத்தினர் அழைத்துச் சென்ற இடங்களில் மட்டும் ஆய்வு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. ஆய்வின் போது நாமக்கல் மாவட்ட மண்டல உதவி செயற் பொறியாளர் பழனி, செயல் அலுவலர் ஏழுமலை உடன் இருந்தனர். திருநாவுகரசு உள்ளிட்ட வேலூர் பேரூராட்சியினர் உடன் இருந்தனர். மேலும் பொத்தனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியிலும் மதுரை மண்டல பேரூராட்சிகளின் மதுரை மண்டல பேரூராட்சிகளின் நிர்வாக பொறியாளர் சாய்ராஜ் ஆய்வு மேற்கொண்டார்.
Next Story