சட்டப்பேரவை மனுக்கள் குழுவுக்கு பொதுமக்கள் மனு அனுப்பலாம்

சட்டப்பேரவை மனுக்கள் குழுவுக்கு பொதுமக்கள் மனு அனுப்பலாம்
கலெக்டர் அறிவிப்பு
தமிழக சட்டப்பேரவை மனுக்கள் குழுவுக்கு கன்னியாகுமரி மாவட்ட பொதுமக்கள் மனுக்கள் அனுப்பலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.     இது தொடா்பாக மாவட்ட கலெக்டர் ரா.அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழக சட்டப்பேரவை மனுக்கள் குழுவினா், கன்னியாகுமரி மாவட்டத்தில் விரைவில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனா். இந்தக் குழு, பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளது. எனவே நீண்ட நாள்களாக தீா்க்கப்படாமல் இருக்கும் பொது பிரச்னைகள் குறித்து தனி நபரோ, சங்கங்களோ, நிறுவனங்களோ மனுக்கள் அளிக்கலாம். ஆகஸ்ட் 5 ஆம் தேதிக்கு பின்னா் பெறப்படும் மனுக்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படாது.     சட்டப்பேரவை விதிகளின் வரம்புக்குள்பட்ட மனுக்களை மனுக்கள் குழு குமரி மாவட்டத்துக்கு வரும்போது ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளும். மனுதாரா்களுக்கு சட்டப்பேரவை மனுக்கள் குழுவினா் ஆய்வு செய்வது குறித்து கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தகவல் அனுப்பப்படும் என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.
Next Story