ரேஷன் முறைகேடுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்!
Pudukkottai King 24x7 |27 July 2024 4:34 AM GMT
போராட்டச் செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறும் ரேஷன் முறைகேடுகளைக் கண்டித்து தமிழக மக்கள் ஜனநாயகக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலர் எம்.ஏ.ஜெ. யூசுப்ராஜா தலைமை வகித்தார். மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் எம். அப்துல்கனி எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டத் தலைவர் எச். சலாவுதீன், விசிக மண்டலச் செயலர் இரா. திருமறவன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு பேசினர். மக்களுக்குத் தேவையான பொருள்களை தர மறுக்கக் கூடாது, மக்களை அவமரியாதையாக நடத்தக் கூடாது என்பன உள்ளிட்ட ரேஷன் முறைகேடுகளைக் களைய மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
Next Story