கந்தசாமி கண்டர் கல்லூரியில் தேசிய மாணவர் படை சார்பில் இரத்ததானம் முகாம்.

கந்தசாமி கண்டர் கல்லூரியில் தேசிய மாணவர் படை சார்பில் இரத்ததானம் முகாம்.
பரமத்தி வேலூர் கந்தசாமி கண்டர் கல்லூரியில் தேசிய மாணவர் படை சார்பாக இரத்ததானம் முகாம் நடைபெற்றது
பரமத்தி வேலூர் ஜூலை.24: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் கந்தசாமிக் கண்டர் கல்லூரியில்   தேசிய மாணவர் படையின் சார்பாக  (விமானப் படை)  இரத்ததானம் முகாம்  நடைபெற்றது. இம்முகாமிற்கு கந்தசாமி கண்டர் கல்லூரி முதல்வர் சாந்தி தலைமை வகித்தார். தேசிய மாணவர் படை மாணவ, மாணவிகள் மற்றும்  தேசிய மாணவர் படை அதிகாரி( விமானப்படை) பிளையிங் ஆபிசர் சிவக்குமார் முன்னிலை வகுத்தார். நாமக்கல்  மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முத்துவர்கள் கபிலர்மலை ஆரம்ப சுகாதார நிலையம் தலைமை மருத்துவர் ஆகியோர் இணைந்து இரத்ததான முகாமில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இம்முகாமில் தேசிய மாணவர் படை மாணவ,மாணவிகள் மற்றும் கந்தசாமி கண்டர் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story