மனநலம் பாதித்தவர் மூன்று பேரை கொல்ல முயற்சி முயற்சி

மனநலம் பாதித்தவர் மூன்று பேரை கொல்ல முயற்சி முயற்சி
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சக்தி நாயக்கன் பாளையம் பால் சொசைட்டி அருகில் உள்ள குடித் தெருவை சேர்ந்த சண்முகம் என்பவரது மகன் செந்தில் குமார் (44)MCA படித்து விட்டு பெங்களூருவில்சாப்ட்வேர் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வரும் மனநலம் பாதிக்கப்பட்ட செந்தில்குமார் 29என்ற வாலிபர் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த பக்கத்து வீட்டைச் சேர்ந்த பிரபு என்பவரது 10 வயது உள்ள தஷ்மிதா பெண் குழந்தையை கத்தியால் வெட்டியுள்ளார்.குழந்தையின் கதறல் சத்தம் கேட்ட செந்தில்குமாரின் தாயார் சம்பூர்ணம் ஓடி வந்து சத்தம் போடவே அக்கம் பக்கத்தில் இருந்த தங்கராசுமற்றும் முத்துவேல் ஆகியோர் செந்தில்குமாரை பிடிக்க ஓடிவந்த போது அவர்களையும் கத்தியால் தாக்கியதில் பெண் குழந்தை தக்க்ஷிதாஉயிருக்கு ஆபத்தான நிலையில் விவேகானந்தா மருத்துவமனையில் அறிவிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். படுகாயம் அடைந்த தங்கராசு முத்துவேல் ஆகியோர் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் ஊரக போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் செந்தில்குமார் பல ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து சிகிச்சைக்கு பின் ஓரளவு தேறி வந்ததாகவும் கடந்த மூன்று மாதங்களாக பைக் ஒன்று சம்பந்தமாக குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறு மீண்டும் மனநலம் பாதிக்கப்பட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் அறையிலேயே யாருடனும் பேசாமல் இருந்து வந்துள்ளார் இந்த நிலையில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த நான்கு பெண் குழந்தைகளில் சோபாவில் அமர்ந்திருந்த தஷ்மிதாவை மட்டும் லேப்டாப் கம்ப்யூட்டர் வைத்திருந்த மேஜை அடியில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கழுத்தில் வெட்டியுள்ளார்.தடுக்க வந்தவர்களையும் கத்தியால் வெட்டியதில் அனைவரும் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் சக்தி நாயக்கன்பாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பெங்களூருவில் வேலை பார்த்து வரும் செந்தில்குமார் ஆண்டுக்கு 40 லட்ச ரூபாய் சம்பளம் பெற்று வந்தவர் என கூறப்படுகிறது.
Next Story