கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பாஜக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பாஜக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பாஜக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்ட தலைமை தபால் நிலையம் முன்பு, பாஜக அரசை கண்டித்து கண்டன காங்கிரஸ் கமிட்டி மாநகரத் தலைவர் வெங்கடேஸ்வரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாமன்ற உறுப்பினர் ஸ்டீபன் பாபு முன்னிலை வகித்தார். 2024- 25 ஆம் ஆண்டு மத்திய அரசு நிதிநிலை அறிக்கையில், தமிழகத்துக்கு போதிய நிதி ஒதுக்காமல் பாரபட்சமாக செயல்படும் பாரதிய ஜனதா கட்சியை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஜிஎஸ்டி வரி செலுத்துவதில் தமிழகம் முதல் இடத்தில் இருந்தாலும், தமிழகத்திற்கு தேவையான நிதி ஒதுக்குவதில் புறக்கணிக்கப்பட்டு வருகிறது என்றும், மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தை புறக்கணித்த ஒன்றிய பாஜக அரசை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நகரத் துணைத் தலைவர் கண்ணப்பன், தாந்தோணி குமார், வட்டாரத் தலைவர் நல்லசிவம், புகலூர் நகர தலைவர் கமல் ராஜேந்திரன், உப்பிடமங்கலம் முருகேசன், ஒன்றிய கவுன்சிலர் லீலாவதி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story