கள்ளச்சாராயம் விற்பனை செய்தவர் குண்டர் சட்டத்தில் கைது.
Paramathi Velur King 24x7 |27 July 2024 2:28 PM GMT
சோழசிராமணி அருகே கள்ளச்சாராயம் விற்பனை செய்தவர் குண்டர் சட்டத்தில் கைது சிறையில் அடைப்பு.
பரமத்தி வேலூர்:27- பரமத்தி வேலூர் தாலுகா சோழசிராமணி அருகே உள்ள ஜமீன் இளம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாமலை(54). விவசாயி இவர் அந்த பகுதியில் சாராய ஊரல் போட்டு கள்ளச்சாராயம் காய்ச்சி மறைமுகமாக விற்பனை செய்து வந்துள்ளார். அவரை ஜேடர்பாளையம் போலீசார் அடிக்கடி கைது செய்து சிறையில் அடைத்து வந்தனர். இந்நிலையில் கடந்த மாதம் 20-ந்தேதி அதேபோல் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்ததாக அண்ணாமலையை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் அண்ணாமலை தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்ததாக பல வழக்குகள் அவர் மீது இருப்பதால் அண்ணாமலையை மாவட்ட ஆட்சியர் உமா குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய பரிந்துரை செய்திருந்தார். அதன் அடிப்படையில் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் பரமத்தி வேலூர் துணைபோலீஸ் சூப்பிரண்டு சங்கீதா, போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ் குமார் ஆகியோர் அண்ணாமலை மீது குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்து அண்ணாமலையை குண்டர் சட்டத்தில் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story