மூத்த வழக்கறிஞருக்கு பாராட்டு விழா

சங்ககிரி: மூத்த வழக்கறிஞருக்கு பாராட்டு விழா ....
வழக்கறிஞர்கள் நவீன தொழில்நுடபங்களை அறிந்து கொள்ள வேண்டும் என சேலம் மாவட்டம் சங்ககிரியில் முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் பேச்சு... சேலம் மாவட்டம் சங்ககிரி அருகேயுள்ள தனியார் திருமண மண்டபத்தில் தொடர்ந்து 60 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த வழக்கறிஞர் ராமச்சாமிக்கு பாராட்டி வைர விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம், சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். அப்போது பேசிய உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், கேரள மாநிலத்தின் முன்னாள் கவர்னருமான சதாசிவம் இந்தியாவில் நீதிமன்றகள் நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட்டு வருகின்றது எனவும் நீதிமன்றத்தில் தினசரி வழக்குகள் வழக்குரைஞர்கள் தங்களது செல்போன்களில் தெரிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது எனவும் அவை தற்போது மேலும் தரம் உயர்த்தப்பட்டு நவீன தொழில்நுடப்பத்திற்கு ஏற்றவாறு கொண்டு வரப்பட்டுள்ளது எனவும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள் எவ்வாறு அவர்களது வாதங்களை எடுத்துரைக்கின்றனர், நீதிபதிகள் கேட்பது குறித்து நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகின்றது எனவும் இந்த வசதிகளை வழக்குரைஞர்கள் அவரவர் வழக்காடிகளுக்கும் தெரியப்படுத்த வேண்டும் எனவும் மேலும் அவர் இளம் வழக்குரைஞர்கள் முன்பு போல் புத்தகங்களை படித்து தெரிந்து கொள்வதற்கு பதில் இணையதளத்திலேயே நீதிமன்ற தீர்ப்புகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் மேலும் வழக்குரைஞர்கள் நீதிமன்றத்தில் நடைபெறும் மக்கள் நீதிமன்றம் (லோக்அதாலத் ), சமரச தீர்வு மையம், இசைவு தீர்ப்பாயம் உள்ளிட்டவைகளில் வழக்குகளை முடித்து வழக்காடிகளுக்கு விரைவில் தீர்ப்புகளை பெற்றுத்தர முயல வேண்டும் எனவும் மேலும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு வாரமும் விடுமுறை நாளன்று அந்த மாவட்டத்திற்கு சென்று வழக்குரைஞர்கள் சங்க நிர்வாகிகள், நீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்கள் உள்ளிட்டோரை தனிதனியாக பேசி அவர்களின் குறைகளை குறிப்பெடுத்துக்கொண்டு அதனை தலைமை நீதிபதியிடம் கூறி சரி செய்யும் போது நீதிமன்றங்களில் வழக்குகள் விரைந்து விசாரித்து தீர்ப்பளிக்க உதவியாக அமையும் எனவும் தான் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருக்கும் போது மும்பை குண்டு வெடிப்பு ,வாக்கு இந்திரத்தில் நோட்டா உள்ளிட்ட பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகளை வழங்கியதாகவும் பேசினார். இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் பேசுகையில் இளம் வழக்குரைஞர்கள் மூத்த வழக்குரைஞர்களிடம் அனுபவம், தொழிலை சிறந்த முறையில் கற்றுக்கொள்ள வேண்டும். வழக்குரைஞர்கள் கடினமாக உழைத்து தொழிலை கண்ணியம், மரியாதை, உண்மையாக மேற்கொள்ள வேண்டும். வழக்கறிஞர் தொழிலுக்கு அப்பாற்பட்ட செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். சமுதாயத்தில் ஒரு பொறுப்பள்ளவர்களாக பணியாற்ற வேண்டும் எனவும் பேசினார். அப்போது சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கண்ணம்மாள், சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் (பொது) ஜோதிராமன், சேலம் மாவட்ட நீதிபதி சுமதி, சேலம் மாவட்ட குற்றவியல் தலைமை நீதிமன்ற நீதிபதி நம்பிராஜன், சங்ககிரி சார்பு நீதிமன்ற நீதிபதி பன்னீர்செல்வம் உட்பட நீதிபதிகள் வழக்கறிஞர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story