இன்று முதல் வெள்ள அபாய எச்சரிக்கை பிரச்சாரம் தீவிரம் தாசில்தார் தகவல்

இன்று முதல் வெள்ள அபாய எச்சரிக்கை பிரச்சாரம் தீவிரம் தாசில்தார் தகவல்
குமாரபாளையம் காவிரி கரையோர பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை இன்று முதல் குமாரபாளையம் பகுதியில் தொடங்கப்படுவதாக தாசில்தார் சிவகுமார் தகவல் தெரிவித்துள்ளார்.
குமாரபாளையம் காவிரி கரையோர பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை இன்று முதல் குமாரபாளையம் பகுதியில் தொடங்கப்படுவதாக தாசில்தார் சிவகுமார் தகவல் தெரிவித்துள்ளார். இது பற்றி தாசில்தார் சிவகுமார் கூறியதாவது: மேட்டூர் அணையில் இருந்து 5 ஆயிரம் கன அடி தண்ணீர் நாளை முதல் (இன்று) திறந்து விட உள்ளனர். குமாரபாளையம் நகராட்சி நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை பிரச்சாரம் நாளை (இன்று) முதல் தொடங்கவுள்ளனர். இதையொட்டி பிரச்சார வாகனங்கள் தயார் நிலையில் உள்ளது. காவிரி கரையோர பகுதிகளான காவேரி நகர், சின்னப்பநாயக்கன்பாளையம், வேதாந்தபுரம், கலைமகள் வீதி, புத்தர் வீதி, பாலக்கரை, மணிமேகலை வீதி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை பிரச்சாரம் செய்யவுள்ளனர். காவிரியில் அதிக நீர் வந்து, அதனால் கரையோர பகுதி குடியிருப்பு வாசிகள் பாதிக்கப்பட்டால் அவர்களை தங்க வைக்க திருமண மண்டபங்கள், அரசு பள்ளி வளாகங்கள் தயார் நிலையில் உள்ளன. காவிரி கரையோரப் பகுதிகளை குமாரபாளையம், பள்ளிபாளையம் ஆர்.ஐ.க்கள், வி.ஏ.ஓ.க்கள் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். இவர்களுக்கான அவசர ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Next Story