சோழிய வெள்ளாளர் கல்வி நலச்சங்கம் சார்பில் ஏழாம் ஆண்டு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா நடைபெற்றது.
சோழிய வெள்ளாளர் கல்வி நலச்சங்கம் சார்பில் ஏழாம் ஆண்டு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா நடைபெற்றது. கரூர் மாவட்டம், தாந்தோணி பகுதியில் உள்ள அம்சவேணி திருமண மண்டபத்தில், மூன்று மந்தையைச் சேர்ந்த 84 சோழிய வெள்ளாளர் கல்வி நல சங்கம் சார்பில், சமுதாய மாணவர்களுக்காக 7-ம் ஆண்டு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா அமைப்பின் தலைவர் சுப்பிரமணி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பொருளாளர் கனகராஜ், செயலா ராஜமாணிக்கம், மூன்று மந்தை 84 சமூக நலச் சங்கத்தின் தலைவர் முத்துமாணிக்கம், வைரமுத்து, ஓம் சக்தி எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த பழனிச்சாமி உள்ளிட்ட ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவ - மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நடந்து முடிந்த 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொது தேர்வுகளில், மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற சோழிய வெள்ளாளர் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கும், அதே போன்று அரசு உயர்நிலைப் பள்ளியில் மற்றும் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில், அதிக மதிப்பெண்கள் பெற்ற சோழிய வெள்ளாளர் சமுதாயத்தை சேர்ந்த மாணவர்களில் முதல் 2- இடங்களை பிடித்த மாணவர்களுக்கும் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா நடைபெற்றது.
Next Story




