திருச்செங்கோடு முதல் சென்னை வரை சென்று வர அரசு சொகுசு பேருந்து கேட்டு மனு

திருச்செங்கோடு முதல் சென்னை வரை சென்று வர அரசு சொகுசு பேருந்து கேட்டு மனு
நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை புரிந்த போக்குவரத்து துறை அமைச்சர் S.S.சிவசங்கர் அவர்களை சந்தித்து நாமக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.எம்.மதுரா செந்தில் அவர்கள், தொழில் நகரமான திருச்செங்கோடு மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான படுக்கை வசதி கொண்ட குளிர்சாதன பேருந்து( Sleeper coach) திருச்செங்கோடு முதல் சென்னை வரை சென்று வருவதற்கு வழிவகை செய்து தருமாறு கோரிக்கை மனு அளித்தார்கள். இந்த நிகழ்ச்சியின் போது நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் பாராளுமன்ற உறுப்பினருமான கே ஆர் என் ராஜேஷ்குமார், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் உமா ஆகியோர் உடன் இருந்தனர்
Next Story