ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலுக்கு திருவிளக்கு பூஜை!
Pudukkottai King 24x7 |28 July 2024 8:35 AM GMT
பக்தி
ஆடி திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலுக்கு திருவிளக்கு பூஜையிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆவுடையார் கோவில் தாலுகா கதிராமங்கலம் ஊராட்சியில் உள்ள சாத்தியடி கிராமத்தில் அமைந்துஅருள் பாலித்து கொண்டு இருக்கும் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலுக்கு நூற்றிற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு பூசையிட்டு சுவாமி தரிசனம் செய்தனர் இவ்விழா இந்த ஆண்டு இரண்டாம் ஆண்டாக நடைபெற்றுக் கொண்டுள்ளது இதேபோல் திருவிளக்கு பூஜை ஏற்றினால் குடும்பம் எந்த ஒரு நோய் நொடியும் இல்லாமல் செல்வ செழிப்போடு இருக்கும் என்றும் விவசாயம் செழிக்கும் என்றும்,தாலி பாக்கியம் நீண்ட ஆயுளோடு இருக்கும் என்றும் இப்பகுதியில் உள்ள பெண்கள் திருவிளக்கு பூசையிட்டு சுவாமி தரிசனம் செய்வது வழக்கம் இவ்விழாவை அந்த கிராம பொதுமக்களும்இளம் பறவை இளைஞர் நற்பணி மன்றத்தினரும் இணைந்து நடத்தினர்
Next Story