போக்குவரத்து துறையை தனியார் மயம் ஆக்குவதை கைவிட வேண்டும் போக்குவரத்து கழகப் பணியாளர்கள் சம்மேளனம் காங்கேயத்தில் கண்டனம்.
Kangeyam King 24x7 |28 July 2024 12:16 PM GMT
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை மண்டலங்களின் 24 வது பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. ஈரோடு மண்டல தலைவர் கலைமுருகன் தலைமையில் மாநில நிர்வாகிகள் முன்னிலையில் இந்த கூட்டமானது தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
காங்கேயத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்கள் சம்மேளனம் மற்றும் ஓய்வு பெற்றோர் பணியாளர்கள் சம்மேளனம் சார்பில் ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை மண்டலங்களின் 24 வது பொதுக்குழு கூட்டம் இன்று ஈரோடு மண்டல தலைவர் கலை முருகன் தலைமையில் நடைபெற்றது. மாநில நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்திற்கு கட்சி சார்பற்ற அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்கள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டன.ர் இந்த கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் சம்பளம், பென்ஷன், ஒப்பந்தகால பணப்பலன்களுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி அரசு ஊழியர் ஆகிட வலியுறுத்துதல் போக்குவரத்துக் கழன்களை முழுமையாக அரசுத் துறையாக்கி பணியாளர்கள் முதல் அலுவலர்கள் வரை அனைவரையும் அரசு ஊழியர் ஆக்க வேண்டும், உதிய பஞ்சப்படி நீதிமன்ற உத்தரவுப்படி தமிழக அரசு வழங்க வலியுறுத்துவதாகவும், 15 வது ஊதிய ஒப்பந்தம் வழங்க வேண்டும். ஓட்டுநர், நடத்துனர் சீனியாரிட்டி பேருந்து பணி ஒதுக்கீடு செய்ய வேண்டும். பணி நேரத்தில் பாதுகாப்பு வழங்கிட வலியுறுத்த வேண்டும். 1972-ல் போக்குவரத்து கழகங்களுக்கு முன்னாள் முதல்வர் கலைஞர் போட்ட அரசாணையை காற்றில் பறக்க விட்டதை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்தனர். மேலும் அரசு போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டம் என்பதை கூறுவதையும் வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தனர். மேலும் வேலைப்பளு தண்டனைகள் தவிர்த்திட வலியுறுத்தப்படுவதாகவும், பணியாளர்கள் எண்ணிக்கை நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும் பணி நியமனமும், சமூக நீதி காக்க வேண்டும் எனவும் கோரிக்கையை முன் வைத்தனர்.
Next Story