வெள்ளகோவிலில் அப்துல் கலாம் நினைவு தினம் அனுசரிப்பு.
அப்துல் கலாம் நினைவு தினத்தை ஒட்டி வெள்ளகோவில் காங்கேயம் சாலை பழைய பஸ் நிலையம் அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அப்துல் கலாம் திரு உருவ படத்துக்கு மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை தலைவர் ராஜ்குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் அப்துல் கலாம் நன்னடத்தை வழியில் செயல்பட உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் வழக்கறிஞர் கந்த சரவணன், அறக்கட்டளை இணைச் செயலாளர் கோபி கிருஷ்ணன், நிர்வாகிகள் சம்பத்குமார், திவாகர், விக்னேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story





