காவிரியில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு வெள்ள அபாய எச்சரிக்கை.
Paramathi Velur King 24x7 |28 July 2024 1:47 PM GMT
பரமத்தி வேலூர் தாலுகா பொத்தனூர் காவிரியில் தண்ணீர் வரத்து அதிரித்துள்ளதால் பொத்தனூர் பேரூராட்சியினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துத்துள்ளனர்.
பரமத்தி வேலூர்:29- கர்நாடகா மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக அதிக அளவில் மழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகா கே.ஆர்.எஸ் அனையில் இருந்து 1 லட்சத்து 30 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் மேட்டூர் அனைக்கு தண்ணீர் வந்து 100 அடியை எட்டியது. மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் அதிக அளவில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இன்று அனையில் இருந்து காவிரி ஆற்றில் அதிகப்படியான தண்ணீர் திறந்து விட இருப்பதால் காவிரி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பொத்தனூர் பேரூராட்சி நிர்வாகம் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில் பெத்தனூர் பகுதி மக்கள் காவிரி கரையோரம் செல்லவோ குளிக்கவோ மீன் பிடிக்கவோ செல்ல அனுமதி இல்லை மீறி செல்பவர்கள் மீது காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் பெத்தனூர் பேரூராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
Next Story