காவிரி கரையோர பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

சங்ககிரி: காவிரி கரையோர பொது மக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை....
.சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட உள்ளதாக சங்ககிரியை அடுத்த காவேரிப்பட்டி, புள்ளா கவுண்டம்பட்டி கரையோர பகுதிகளில்வசிக்கும் பொது மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எச்சரிக்கை விடப்பட்டது ... கர்நாடகாவில் தற்போது பெய்து வரும் கன மழையினால் கர்நாடகா அணைகள் அதன் முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து உபரி நீர் ஒரு லட்சத்து 75 ஆயிரம் கன அடி திறந்து விடுவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்ட உள்ள நிலையில் மேட்டூர் அணையில் இருந்து தொடங்கும் காவிரியின் கரையோர பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது... அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட காவேரிபட்டி, கோனேரிப்பட்டி, அக்ரஹாரம், கல்வடங்கம், புள்ளாக்கவுண்டம்பட்டி ஆகிய பகுதிகளில் காவிரி கரையோரத்தில் வசிக்கும் பொது மக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.. அதற்குண்டான பணிகளை அந்தந்த பகுதி கிராம பேரூராட்சி நிர்வாகத்தின் அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி உத்தரவின் பேரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்... முன்னதாக இன்று மாலை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மேட்டூர் அணையிலிருந்து 12 ஆயிரம் கன அடி தண்ணீர் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டது குறிப்பிடத்தக்கது .
Next Story