தமிழிசை சௌந்தரராஜனுக்கு மீண்டும் ஆளுநர் பதவி வழங்கப்படாதது வருத்தமளிக்கிறது கார்த்திக் சிதம்பரம்!

தமிழிசை சௌந்தரராஜனுக்கு மீண்டும் ஆளுநர் பதவி வழங்கப்படாதது வருத்தமளிக்கிறது கார்த்திக் சிதம்பரம்!
அரசியல் செய்திகள்
தமிழிசை சௌந்தரராஜனுக்கு மீண்டும் ஆளுநர் பதவி வழங்கப்படாதது வருத்தமளிக்கிறது என்றார் சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம். இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலத்தில் அவர் மேலும் கூறியது: மத்திய அரசோடு தமிழக அரசு ஒத்துழைக்கவில்லை என்று பிரதமர் மோடி பொதுவாகக் கூறாமல் எந்தத் திட்டத்துக்கு ஒத்துழைக்கவில்லை என்று கூறி வேண்டும். 100 நாள் வேலைத் திட்டத்துக்கு போதிய நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை. மாணவர்களுக்கான கல்விக் கடனைத் தள்ளுபடி செய்யவில்லை. தமிழகத்தில் செயல்படுத்தப்படும் மதியம் மற்றும் காலை உணவுத் திட்டத்துக்கு குறைவான நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. சாதாரண மக்களின் திட்டங்களுக்கான நிதியை மத்திய அரசு குறைத்துக் கொண்டு வருகிறதுதமிழிசை சௌந்தரராஜனுக்கு மீண்டும் ஆளுநர் பதவி கிடைக்கவில்லை என்ற செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் சித்து விளையாட்டுக்கு அவர் பலியாகி இருக்கிறார். யாரை வேண்டுமானாலும் துணை முதல்வர், அமைச்சராக்கும் உரிமை மாநிலத்தின் முதல்வருக்கே உண்டு என்றார் அவர்.
Next Story