மக்களவையில் எதிர்க்கட்சிகளை பேசவிடாமல் முடக்குகிறது பாஜக!

மக்களவையில் எதிர்க்கட்சிகளை பேசவிடாமல் முடக்குகிறது பாஜக!
அரசியல் செய்திகள்
மக்களவையில் எதிர்க்கட்சிகளைப் பேசவிடாமல் பாஜக முடக்குகிறது என்றார் முன்னாள் மத்திய அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான ப. சிதம்பரம். இதுகுறித்து ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலத்தில் அவர் மேலும் கூறியது:எதிர்க்கட்சி உறுப்பினர்களை மக்களவையிலும், அதேபோல நிதி ஆயோக் கூட்டத்திலும் பாஜக அரசு பேச விடுவதில்லை. இது எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்கும் செயலாகும். நிதி ஆயோக் கூட்டத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி 5 நிமிடமே பேசி இருக்கிறார். அவர் கூடுதல் நேரம் பேச ஏன் அனுமதித்திருக்கக் கூடாது?. குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது நடந்த தேசிய வளர்ச்சிக் குழு மற்றும் மாநிலங்களுக்கு இடையேயா குழுக் கூட்டத்தில் 25 நிமிடம் பேசினார். அப்போது யாரும் குறுக்கிடவில்லை என்றார் அவர்.
Next Story