செட்டிச்சாவடியில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்
Salem (west) King 24x7 |29 July 2024 7:45 AM GMT
அருள் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது
சேலம் மாநகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் செட்டிச்சாவடி பகுதியில் கொட்டப்பட்டு வருகிறது. அதனால் செட்டிச்சாவடி, கொண்டப்பநாயக்கன்பட்டி, வெள்ளக்கல்பட்டி, வெள்ளாளப்பட்டி, தேக்கம்பட்டி, மூங்கில்பாடி ஊராட்சி பகுதிகளில் மக்கள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எனவே குப்பைகளை அகற்றுவது குறித்தும், அதுதொடர்பாக அடுத்தக்கட்ட போராட்டம் நடத்தவது குறித்தும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் செட்டிச்சாவடி ஊரடி மாரியம்மன் கோவில் திடலில் நடந்தது. கூட்டத்தில் அருள் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார். குப்பைகளை அகற்றுவது குறித்தும், இந்த பகுதியில் குப்பைகள் கொட்டப்படாமல் தடுப்பது குறித்தும் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் ஏற்காடு அடிவாரம் குப்பை மேடு அகற்றும் இயக்க ஒருங்கிணைப்பாளர் கதிர் ராசரத்தினம், பசுமைதாயகம் சத்ரிய சேகர், செட்டிச்சாவடி ஊராட்சி துணைத்தலைவர் பரிமளா, ஊராட்சி தலைவர் அம்பிகா, கவுன்சிலர் கருணாகரன், தேக்கம்பட்டி ஊராட்சி தலைவர் சுதா, முன்னாள் தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story