ராமநாதபுரம் ஆடி திருவிழா கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவிலில் ஆடி திருவிழாவை முன்னிட்டு கொடியேற்ற நிகழ்ச்சி வெகு விமர்சியாக நடைபெற்றது
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவிலில் ஆடி திருவிழாவை முன்னிட்டு கொடியேற்ற நிகழ்ச்சி வெகு விமர்சியாக நடைபெற்றது வெளி மாவட்ட மற்றும் வெளி மாநிலத்திலிருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் ஆடித்திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ராமநாத சுவாமி மற்றும் பர்வத வர்த்தினி அம்பாளை சுவாமி தரிசனம் மேற்கொண்டனர் உலகப் பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவிலில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் திருவிழாக்கள் மாசி மகா சிவராத்திரி திருவிழா மற்றும் ஆடி திருவிழா ஆகும் ஆடி உற்சவத்தை முன்னிட்டு இன்று அருள்மிகு ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவிலில் அம்பாள் சன்னதி முன்பு உள்ள கொடிமரத்தில் வேதாச்சாரியார்கள் மந்திரம் முழங்க மேல வாக்கியங்களுடன் வெகு விமர்சியாக ஆடித்திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது அடி திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சியை காண உள்ளூர் பொதுமக்கள் வெளி மாவட்ட வெளி மாநிலத்திலிருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் ஆடித்திருவிழா கொடியேற்றத்தை கண்டு ராமநாதசுவாமி மற்றும் பர்வத வர்த்தினி அம்பாளின் தரிசனம் பெற்று சென்றனர் தொடர்ந்து 15 நாள் நடைபெறும் ஆடி திருவிழாவில் தினம்தோறும் ராமநாதசுவாமி மற்றும் பர்வத வர்த்தினி அம்பாள் பல்வேறு அலங்காரங்களில் ராமநாத சுவாமி திருக்கோவிலின் 4 ரக வீதிகள் வழியாக வளம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண நிகழ்வு ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி இரவு 7 மணி அளவில் திருக்கோவில் கல்யாண மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற உள்ளதாக திருக்கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளனர் மேலும் இன்று நடைபெற்ற ஆடி திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சியில் திருக்கோவில் இனை ஆனையர் சிவராம் குமார் ராமேஸ்வரம் நகர் மன்ற தலைவர் நாசர் கான் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் மற்றும் உள்ளுர் முக்கியஸ்தர்கள் உடன் இருந்தனர்.
Next Story