ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் தற்கொலை செய்து கொண்ட தொடர்பான வழக்கு சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்
Virudhunagar King 24x7 |29 July 2024 11:39 AM GMT
திருத்தங்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் தற்கொலை செய்து கொண்ட தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்ட நிலையில் விருதுநகர் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.
சிவகாசி அருகே திருத்தங்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் தற்கொலை செய்து கொண்ட தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்ட நிலையில் விருதுநகர் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பாலாஜி நகரைச் சேர்ந்தவர் லிங்கம் (45). கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சிவகாசி அருகே உள்ள சுக்கிரவார்பட்டியில் ஆசிரியராகப் பணியாற்றியபோது, அதே பள்ளியில் பணியாற்றிய கணவரை இழந்த ராமச்சந்திராபுரத்தைச் சேர்ந்த பழனியம்மாள் (47) என்பவரை திருமணம் செய்துகொண்டார். பழனியம்மாளுக்கு மகள் ஆனந்தவல்லி இருந்தார். அதன்பின், லிங்கத்துக்கும், பழனியம்மாளுக்கும் ஆதித்யா என்ற மகன் பிறந்தார். லிங்கம் சிவகாசி அருகே தேவதானத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராகவும், சுக்கிரவார்பட்டியில் பழனியம்மாள் ஆசிரியையயாகவும் பணியாற்றி வந்தனர். இருவரும் திருத்தங்கல் பாலாஜி நகரில் வாடகை வீட்டில் வசித்தனர்.அதைத்தொடர்ந்து இவர்களது மகள் ஆனந்தவல்லிக்கு சிவகாசி பராசக்தி காலனியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியனுடன் திருமணம் நடந்தது. ஆனந்தவல்லி சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி கணவருடன் அங்கு வசித்து வந்தார். பிரசவத்துக்காக 5 மாதங்களுக்கு முன்பு ஆனந்தவல்லி திருத்தங்கல் வந்தார். அவருக்கு சஸ்டிகா என்ற பெண் குழந்தை பிறந்தது. ஆனந்தவல்லியின் திருமணத்துக்காகவும், கரோனா காலத்தில் குடும்பத்தில் அனைவரும் பாதிக்கப்பட்டதால் மருத்துவச் செலவுக்காகவும் பலரிடம் ரூ. 1 கோடி வரை லிங்கம் கடன் வாங்கியிருந்தார். அதைச் திருப்பிச் செலுத்த முடியாமல் சிரமத்தில் இருந்தார். குடும்பச் சொத்தை விற்று கடனை அடைத்து விடலாம் என குடும்பத்தினர் ஆறுதல் கூறினர். இதற்கிடையே கடந்த மே 23-ம் தேதி வீட்டைப் பூட்டிக்கொண்டு மகள் ஆனந்தவல்லி, மகன் ஆதித்யா, பேத்தி சஸ்டிகா ஆகியோருக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு லிங்கமும் , பழனியம்மாளும் தற்கொலை செய்துகொண்டனர். கடன் தொல்லையால் இச்சம்பவம் நடந்ததாக 5-க்கும் மேற்பட்டோர் மீது திருத்தங்கல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவர்களைக் கைது செய்தனர். அதைத்தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு இவ்வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட்டது. பின்னர், சிபிசிஐடி கூடுதல் டிஜிபி உத்தரவின் பேரில் இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை திருத்தங்கல் போலீசார் விருதுநகர் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில், ஐந்து பேர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பான வழக்கை குறித்து விருதுநகர் சிபிசிஐடி போலீஸார் புதிதாக வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கி உள்ளனர். இதனால் இவ்வழக்கில் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.
Next Story