சிறுமியை வெட்டிய நபர் மீது கடும் நடவடிக்கை தேவை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை:
T.gode (Mallasamudram) King 24x7 |29 July 2024 1:20 PM GMT
சக்திநாயக்கன்பாளையம் கிராமத்தில், சிறுமையை கொடூரமாக வெட்டிய நபர் மீது கடும் நடவடிக்கை எடுத்து, அச்சிறுமிக்கு மருத்துவ செலவை அரசு ஏற்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை.
திருச்செங்கோடு அருகே, சக்தியநாயக்கன்பாளையம் என்ற கிராமத்தில் பிரபு(40), மேகலா (35) ஆகிய தம்பதியருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர் இவர் கட்டிட கூலி வேலை செய்து வரும் தொழிலாளி. இவரது மூத்த மகள் தஸ்மிதா (11), இரண்டாவது மகள் வர்ஷிதா (3) கடந்த 27ம் தேதி சனிக்கிழமையன்று மதியம் சுமார் ஒரு மணி அளவில் செந்தில்குமார்(45) என்பவரது வீட்டின் அருகில் பிரபுவின் உறவினர்கள் குடியிருந்து வருவதால் அந்த வீட்டிற்குஅக்கம் பக்கத்தில் உள்ள குழந்தைகளுடன் ஐந்து பேர் சென்று விளையாடிக் கொண்டிருந்தனர். அப்பொழுது செந்தில்குமார் குழந்தைகளை வீட்டில் அடைத்து பூட்டி வைத்துள்ளார். இதில் சிறுவன் ஒருவர் கதவை திறந்து நான்கு பேருடன் வெளியே ஓடி வந்து விட்டனர். அப்போது செந்தில்குமார் என்பவர் அச்சிறுமியை கத்தியால் கழுத்தில் வெட்டி உள்ளார். மயக்கம் அடைந்து கீழே விழுந்த நிலையில் சத்தம் கேட்டு முத்துவேல் தங்கராசு மற்றும் உறவினர்கள் சென்றபோது வீட்டுக்குள் வந்தால் குழந்தையை கொன்று விடுவேன் என்று கத்தியை கழுத்தில் வைத்து மிரட்டி உள்ளார். பின்னர் கத்தியுடன் வெளியே வந்த செந்தில்குமார் முத்து வேலை சரமாரியாக வெட்டியுள்ளார். தங்கராஜ் என்பவரை துரத்திக்கொண்டு அவரையும் வெட்டி உள்ளார். பின்னர், அனைவரையும் தாக்கி விட்டு வீட்டில் சென்று கதவை பூட்டிக் கொண்டார். காவல்துறைக்கு தகவல் தெரிவித்து காவல்துறையினர் அச்சிறுமியை மீட்டு சேலத்தில் உள்ள, காவேரி தனியார் மருத்துவமனையில் உள் சிகிச்சை நோயாளியாக சேர்த்துள்ளனர். அச்சிறுமி கவலைக்கிடமாக தற்போது உள்ளளார். இந்நிலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஞாயிறன்று குமரமங்கலத்தில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பகுதிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தலைமையில் அப்பகுதி மக்களை சந்தித்து விவரம் கேட்டு ஆறுதல் கூறினார்கள். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுரேஷ் கூறியதாவது..... ஐந்து குழந்தைகளை அடைத்து கொலை செய்ய முயற்சித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதற்கு துணையாக இருந்த அவரது அம்மா சம்பூர்ணம் மீதும், சம்பவ நேரத்தில் இருந்த உறவினர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கொடூரமான செயலுக்கு நீதி வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு செலவில் சிகிச்சை அளிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் அப்பகுதி குடும்பங்களுக்கு காவல்துறை உரிய பாதுகாப்பினை வழங்க வேண்டும். உடனடியாக எஃப்.ஐ.ஆர்., முதல் தகவல் அறிக்கை வழங்கி சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ள திருச்செங்கோடு காவல்துறை நிர்வாகமும், மாவட்ட காவல்துறை நிர்வாகம் மாவட்ட ஆட்சியரும், தமிழக அரசும் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் ஒன்றிய குழு உறுப்பினர் ஈஸ்வரன், கிளைச் செயலாளர் பூபதி உட்பட பலர் சென்றிருந்தனர்.
Next Story