நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே பட்டியில் அடைத்து வைத்திருந்த இரண்டு ஆடுகளை கடித்துக் கொன்ற வனவிலங்கு பொதுமக்கள் அச்சம்
Coonoor King 24x7 |29 July 2024 2:39 PM GMT
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே பட்டியில் அடைத்து வைத்திருந்த இரண்டு ஆடுகளை கடித்துக் கொன்ற வனவிலங்கு பொதுமக்கள் அச்சம்
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே பட்டியில் அடைத்து வைத்திருந்த இரண்டு ஆடுகளை கடித்துக் கொன்ற வனவிலங்கு பொதுமக்கள் அச்சம்..... நீலகிரி மாவட்டத்தை பொறுத்தளவில் வனவிலங்குகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இந்நிலையில் கூடலூர் சுற்றுவட்டார பகுதி முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் கேரளா முத்தங்கா சரணாலயம் மற்றும் கர்நாடகா பந்திப்பூர் சரணாலயம் சுற்றியுள்ள பகுதியாகும் இங்கு புலி கரடி சிறுத்தை கருஞ்சிறுத்தை மான் போன்ற விலங்குகள் அதிகம் காணப்படுகிறது இந்நிலையில் கூடலூர் அருகே உள்ள ஏற்றம் வயல் பகுதியை சேர்ந்தவர் ரவி இவருடைய இரண்டு ஆடுகளை பட்டியில் அடைத்து வைத்துள்ளார் நேற்று இரவு வேளையில் மர்ம விலங்கு இரண்டு ஆடுகளையும் கடித்துக் கொன்றது தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவப் பகுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் ஆடுகளை கொன்றது சிறுத்தையா புலியா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் குடியிருப்பு பகுதியில் வளர்ப்பு ஆடுகளை மர்ம விலங்கு அடித்துக் கொன்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது மேலும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
Next Story