அறந்தாங்கி - கட்டுமாவடி சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படுமா?
Pudukkottai King 24x7 |30 July 2024 3:23 AM GMT
பொது பிரச்சனைகள்
அறந்தாங்கி: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெரிய நகரங்களில் அறந்தாங்கியும் ஒன்றாகும் அறந்தாங்கியில் சில ஆண்டுகளுக்கு முன்பு அகல ரயில் பாதை பணிகள் முடிவடைந்து இப் போது ரயில் போக்குவரத்து நடந்து வருகிறது. சென்னைக்கு வாரத்துக்கு 3 நாட்களும், காரைக்கு டியில் இருந்து திருவாரூருக்கு வாரத்தில் 5 நாட்களும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இது தவிர ராமேஸ்வரம் வேளாங்கண்ணி சிறப்பு ரயிலும் இயக் கப்படுகிறது. ரயில் இயக்கப்படும் நேரத்தில் கட்டு மாவடி சாலையில் உள்ள ரயில்வே கேட் காலை மூடப்படும்போது, பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவர்கள், பணிக்கு செல்லும் அலுவலர்கள் சிர மத்துக்கு உள்ளாகின்றனர். மேலும், அவ்வப்போது போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. வரும் நாட் களில் அறந்தாங்கி வழித்தடத்தில் கூடுதல் ரயில்கள் இயக்க வாய்ப்புள்ளதால் இங்கு ரயில்வே மேம்பா லம் அமைக்க வேண்டும்.உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டால் ஆவுடையார்கோவில், மண மேல்குடி தாலுகா மற்றும் தஞ்சை, ராமநாதபுரம் மாவட்ட பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் காத்திருக்காமல் விரைவாக பயணத்தை தொடர முடியும். எனவே, அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story