நோய்கள் பரவும் காலமாக உள்ளதால் மாணவிகள் தங்களது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் நகர மன்ற தலைவர் வேண்டுகோள்

நோய்கள் பரவும் காலமாக உள்ளதால் மாணவிகள் தங்களது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் நகர மன்ற தலைவர் வேண்டுகோள்
தூய்மை இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருங்கள் நோயின்றி வாழுங்கள் என்ற கருத்தை வலியுறுத்தும் விதமாக நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சி சார்பில் இன்று திருச்செங்கோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் இடையே சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியை தமிழி தலைமை தாங்கினார்.திருச்செங்கோடு நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு, திமுக நாமக்கல் மேற்கு மாவட்ட வழக்கறிஞர்கள் பிரிவு தலைவர் சுரேஷ் பாபு, துப்புரவு ஆய்வாளர் சிவக்குமார், நகர மன்ற உறுப்பினர் கலையரசி சதீஷ்குமார் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர்.திருச்செங்கோடு நகர மன்ற தலைவர் பேசும்போது மாணவிகள் தங்கள் பகுதியில் சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும் இதனை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் சுகாதாரமாக இருந்தாலும் நோய்கள் பரவும் காலமாக உள்ளது அதனால் சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்துக்கொண்டு நோயின்றி வாழ வழிவகை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் இதனை அடுத்து நகர மன்ற தலைவர் சுகாதார உறுதி மொழியை வாசிக்க 1500 க்கும் மேற்பட்ட மாணவிகள் வழிமொழிந்து உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர் இந்த நிகழ்ச்சியில் மாணவிகள் தேவையற்ற குப்பை பொருள்களில் இருந்து பூக்கள் கண்ணாடி பாட்டில்கள் போன்ற வடிவமைப்பு தேங்காய் சிரட்டையிலிருந்து தராசு பொம்மைகள் உள்ளிட்ட கலைப் பொருட்களாக அழகாக பல்வேறு பொருட்களை செய்திருந்தனர் இதனை கண்ட பார்வையாளர்கள் மாணவிகளின் படைப்புகளை பாராட்டினர்
Next Story