முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக ஆற்றங்கரையோரம் வசிக்கும் பொது மக்களுக்கு பொதுப்பணி துறை எச்சரிக்கை

எச்சரிக்கை
தமிழக கேரளா எல்லையில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் நீர் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களின் நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது தேனி மாவட்ட கம்பம் பள்ளத்தாக்கு ஆயக்கட்டுப் பகுதிகளில் உள்ள 14,707 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு முதல் போக பாசன வசதிக்காக கடந்த ஜூன் ஒன்றாம் தேதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது இந்த நிலையில் கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்பு நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வந்தது இதன் காரணமாக அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது முல்லைப் பெரியாறு அணையின் நீர்வரத்து நேற்று 1457 கன அடியாக இருந்த நிலையில் இன்று அணைப்பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக அணைக்கு வரும் நீர்வரத்து 3616 கன அடியாக அதிகரித்துள்ளது மேலும் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 1341 கன அடியாகவும் அணையின் இருப்பு 4,460 மில்லி கன அடியாக இருந்து வருகிறது தற்போது அணையின் நீர்மட்டம் 128.90 அடியாக இருந்து வருகிறது மேலும் அணையின் நீர் பிடிப்பு பதிவுகளில் இன்றும் மழைக்கு வாய்ப்புள்ளதால் நீர்வரத்து மேலும் அதிகரிக்க கூடும் என்பதால் முல்லை ஆற்றல் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்
Next Story