பரமத்தி காவிரி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.
Paramathi Velur King 24x7 |30 July 2024 7:40 AM GMT
பரமத்தி வேலூர் தாலுகா காவிரி கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பரமத்தி வேலூர், ஜூலை 29: பரமத்தி வேலூர் வட்டத்துக்கு உட்பட்ட காவிரிக் கரையோரப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும் படியும், காவிரியில் குளிக்கவும், துணிகளை துவைக்கவும், நாமக்கல் ஆட்சியர் தடைவிதித்துள்ளனர். மேட்டூர் அணை 120 அடியை எட்டவுள்ள நிலையில் மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 23 ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தண்ணீரை திறப்பை அதிகரிக்க வாய்ப்புள்ளதால் காவிரிக் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என நாமக்கல் ஆட்சியர் ச.உமா எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில் பரமத்தி வேலூர் வட்டத்துக்கு உள்பட்ட காவிரிக் கரையோரப் பகுதிக ளில் வசிக்கும் பொதுமக்களுக்கு பரமத்தி வேலூர் பொதுப்பணி துறை உதவி பொறியாளர் வினோத்குமார், பரமத்தி வேலூர் காவல் துணை கண்காணிப்பாளர் சங்கீதா ஆகியோர் தெரிவித் துள்ளதாவது: காவிரியாற்றில் தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்து வரு வதால் காவிரியில் குளிக்கவும், துணிகளை துவைக்கவும், கால்ந டைகளை மேய்ச்சலுக்கு அழைத் துச் செல்லவும், ஈம காரியங்கள் செய்யவும், மீன்பிடிக்கவும், பரிசல் இயக்கவும் தவிர்க்க வேண்டும். மேலும் வேலூர் காவல் துறை சார்பில் எச்சரிக்கை பல கைகளை காவிரி கரையோரப் பகுதியில் வைத்து போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட் டுள்ளனர். இதேபோல ஜேடர்பாளையம் படுகை அணைப் பகுதியில் உள்ள அண்ணா பூங்காவிற்கு சுற்றுலாப் பயணிகள் வருவதற்கும் பொதுப் பணித் துறையினர் தடை விதித் துள்ளனர்.
Next Story