அனிச்சம்பாளையம் காவிரி கரையோர பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.
Paramathi Velur King 24x7 |30 July 2024 7:46 AM GMT
பரமத்தி வேலூர் அடுத்துள்ள அனிச்சம்பாளையம் காவிரி கரையோர பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
பரமத்தி வேலூர், ஜூலை 31: பரமத்தி வேலூர் வட்டம், அனிச்சம்பாளையம் காவிரிக் கரையோரப் பகுதிகளில் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் சஉமா, பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அனிச்சம்பாளையத்தில் காவிரிக் கரையோரப் பகுதியில் கதவணை அமைக்கும் இடத்தில் மாவட்ட ஆட்சியர் ச.உமா ஆய்வு மேற்கொண்டு பின் னர் கூறியதாவது: பள்ளிபாளையம், குமாரபாளையத்தில் காவிரிக் கரையோரப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை,பாதுகாப்பு நடவடிக் கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தாழ்வான பகுதிகளில் வசிக் கும் பொதுமக்களை பாதுகாக்க சமு தாயக் கூடம், திருமண மண்டபம், பள் ளிகள் உள்ளிட்ட இடங்களில் தேவை யான அடிப்படை வசதிகளுடன் தற் காலிக நிவாரண முகாம்கள் அமைக் கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள துணை ஆட்சியர் நிலை யில் அனைத்துத் துறை அலுவலர் கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு, அனைத்துப் பருதிகளும் தொடர் கண்காணிப்பில் உள்ளன. உள்ளாட்சி, நகராட்சி, மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வரு கிறது. நாமக்கல் மாவட்டத்தில் இது வரை பெரிய அளவில் பாதிப்புகள் எதுவும் இல்லை. காவல் துறை வரு வாய்த் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, நெடுஞ்சாலைகள் துறை, மின்சார வாரியம் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் தயார் நிலையில் உள்ளனர். இயற்கை பேரிடர்கள் குறித்து பொதுமக்கள் 1077 கட்டணமில்லா தொலைபேசி எண். 04286-299137 என்ற கட்டுப்பாட்டு அறை எண் சுனை தொடர்பு கொள்ளலாம் என் றார்.
Next Story