திருப்பத்தூர் அருகே கடன் தொல்லையால் ரயில் முன் பாய்ந்து தற்கொலை!
Tirupathur King 24x7 |30 July 2024 8:25 AM GMT
திருப்பத்தூர் அருகே கடன் திருப்பி கட்டாததால் ரைஸ் மில்லுக்கு சீல் விரக்தியடைந்த உரிமையாளர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே கடன் திருப்பி கட்டாததால் ரைஸ் மில்லுக்கு சீல் விரக்தியடைந்த உரிமையாளர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை திருப்பத்துார் மாவட்டம், சின்ன பேராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மணி(70), இவர் குரும்பேரி கூட்ரோடு அருகே சொந்தமாக ரைஸ் மில் நடத்தி வந்தார். இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் ரைஸ் மில் மீது ஆசிரியர் நகர் அருகே உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.60 லட்சம் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால் குறிப்பிட்ட காலத்தில் அவரால் பணம் திருப்பி செலுத்த முடியவில்லை. இதனைத் தொடர்ந்து தனியார் நிதி நிறுவனம் மணியிடம் கடன் கொடுக்கும்போது வாங்கிய ஆவணங்களை வைத்து அசல் மற்றும் வட்டியுடன் சேர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததாக தெரிகிறது. இதற்கிடையே இரண்டு தினங்களுக்கு முன்பு மணி நடத்தி வந்த ரைஸ் மில்க்கு சீல் வைக்கப்பட்டது. இதனால் விரக்தியடைந்த மணி இன்று திருப்பத்துார் ரயில்வே ஸ்டேஷனுக்கும், காக்கங்கரை ரயில்வே ஷ்டேஷனுக்கும் இடைய உள்ள செவ்வத்தூர் பகுதி ரயில்வே தண்டவாளத்தில் இடையே சேலம் நோக்கி சென்ற ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட மணியின் உடலை மீட்டு திருப்பத்துார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இறந்த மணிக்கு விஜயா என்ற மனைவியும் ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story