புதுக்கோட்டை நகராட்சியின் கடைசி நகர்மன்ற கூட்டம்!

அரசு செய்திகள்
புதுக்கோட்டை நகராட்சியின் கடைசி நகர் மன்ற கூட்டம் இன்று நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது அடுத்த கூட்டம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதால் மாநகராட்சி மேயர் மாநகராட்சி துணை மேயர் ஆகியோர் தலைமையில் கூட்டம் நடைபெறுவதால் இன்று நடைபெறும் நகராட்சியின் கடைசி கூட்டத்திலாவது புதுக்கோட்டை நகரப் பகுதிகளில் நாய் தொல்லைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இரவு நேரங்களில் நாங்களே வெளியே செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது வெறி நாய்களைப் பிடித்து கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என திமுக காங்கிரஸ் அதிமுக உள்ளிட்ட நகர மன்ற உறுப்பினர்கள் கடைசி நகர்மன்ற கூட்டத்தில் கோரிக்கை மேலும் ஏற்கனவே நகராட்சியாக இருக்கும் பொழுது தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பி யு சின்னப்பா முத்துராமலிங்க தேவர் ஆகியோருக்கு சிலைகளும் புதுக்கோட்டை விஜய ரகுநாத தொண்டைமானுக்கு மணிமண்டபம் உள்ளிட்டவைகளை அமைப்பதற்கு ஏற்கனவே நகராட்சியில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது அதனை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் வேண்டுமென நகர்மன்ற உறுப்பினர்கள் கோரிக்கை
தமிழக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு புதுக்கோட்டை காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு நகராட்சிகளை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டது இதனை அடுத்து புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பல்வேறு இடங்களில் தற்பொழுது பல்வேறு கட்டிடங்கள் கட்டப்பட்டு வரும் இடங்களில் மாநகராட்சி என எழுதப்பட்டு மாநகராட்சியாக தற்போது செயல்பட தொடங்கிவிட்டது இந்நிலையில் இன்று புதுக்கோட்டை நகராட்சியில் நகர்மன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது நகராட்சியாக இன்று நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டம் தான் கடைசி கூட்டம் அடுத்து மாநகராட்சியாக தான் கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில் இன்று நடைபெற்ற கடைசி நகர்மன்ற கூட்டத்தில் திமுக அதிமுக காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சார்ந்த நகர் மன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் இன்று நடைபெற்ற நகர் மன்ற கூட்டத்தில் புதுக்கோட்டை நகர மன்ற தலைவர் திலகவதி செந்தில் துணை தலைவர் லியாகத் அலி மற்றும் நகராட்சி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர் கூட்டம் துவங்கியதுமே நகர் மன்ற தலைவர் திலகவதி செந்தில் மாநகராட்சியாக அறிவித்த தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களுக்கு நன்றி தெரிவித்து பேசினார் இன்று நடைபெற்ற நகர் மன்ற கூட்டத்தில் அடுத்த முறை மாநகராட்சியாக கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில் நாமெல்லாம் மாமன்ற உறுப்பினராக ஆகி விடுவோம் ஆனால் நகராட்சியாக இருக்கும் பொழுது பல்வேறு கோரிக்கைகள் வைத்தும் இதுவரையும் நடைமுறைக்கு வரவில்லை மேலும் நகராட்சியில் தொடர்ந்து நாய் தொல்லைகள் அதிக அளவில் இருந்துவருகிறது சொறிநாய்கள் மற்றும் வெறி நாய்களால் பொதுமக்களுக்கு பெரும் இடையூறாக இருந்து வருகிறது நகர்மன்ற உறுப்பினர்களை இரவு நேரத்தில் நடந்து செல்ல முடியாத நிலையில் நாய் தொல்லைகள் அதிகரித்து வருகிறது இது போன்ற நாய்களை பிடித்துக் கொள்வதற்கு நாம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் மேலும் நாய்கள் குரங்குகள் போன்றவைகளுக்கு சாலை ஓரங்களில் மாமிச உணவுகள் வழங்குவார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசினர் அதேபோல் கடந்த முறை நடைபெற்ற நகராட்சி கூட்டத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் புதுக்கோட்டை சேர்ந்த பி யு சின்னப்பா புதுக்கோட்டை மன்னர் விஜயரங்கநாதர் தொண்டைமானுக்கு மணிமண்டபம் உள்ளிட்ட கோரிக்கைகள் திருமணமாக நிறைவேற்றப்பட்ட நிலையில் அது குறித்து எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை மாநகராட்சியாக தரம் உயர்த்தி கூட்டம் நடைபெறும் பொழுது இந்த கோரிக்கையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக நகர்மன்ற உறுப்பினர் செந்தில் கோரிக்கை வைத்தார் அதேபோல் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மாநிலங்களவை எம்பி எம் எம் அப்துல்லா இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி ஆகியோருக்கு கூட்டத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது மேலும் கூட்டத்தில்அதிமுக நகர்மன்ற உறுப்பினர் கே ஆர் ஜி பாண்டியன் அதிகாரிகள் உரிய முறையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இதனால் மக்கள் எங்களிடம் தான் புகார்களை தெரிவிக்கிறார்கள் நாங்கள் கூறும் கோரிக்கைகளை அதிகாரிகள் நிறைவேற்ற மாட்டார்கள் என அதிகாரிகளை மிரட்டும் தோணியில் பேசியது கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
Next Story