கல்லூரி மாணவ மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம்!

போராட்டச் செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் புகழ்பெற்ற புதுக்கோட்டை அரசு மாட்சிமை தங்கிய மன்னர் கலை கல்லூரியில் வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம். நடந்து முடிந்த துணை பாடத்திட்டத்தில் 50 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்றும். குறிப்பாக கணிதம் வேதியல் விலங்கியல் தாவரவியல் துணைப்பாட தேர்வில் 50 சதவீத மாணவர்கள் மிகக் குறைந்த மதிப்பெண்ணை பெற்று தேர்வில் தோல்வி அடைந்துள்ளதாகவும் அதற்கு காரணமான கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி என எஸ் எப் ஐ மற்றும் மாணவர் அமைப்பினர் தற்பொழுது கல்லூரி முன்பாக தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தர்ணா போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் கல்லூரிக்கு சென்ற மாணவ மாணவிகளை மாணவ அமைப்பினர் தடுத்து நிறுத்தியதால் காவல்துறையினருக்கும் மாணவர்கள் அமைப்பிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தற்பொழுது கல்லூரி வாசலில் தர்ணா போராட்டம் நடைபெற்று வருவதால் பாதுகாப்பிற்காக நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
Next Story