புதிய பேருந்து நிலையத்தில், குடிக்க தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி

செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில், குடிக்க தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி.....கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்க்கும் நகராட்சி நிர்வாகம்....
செங்கல்பட்டு நகராட்சி பகுதியில், புதிய பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து, சென்னை, தாம்பரம்,காஞ்சிபுரம், கல்பாக்கம், மாமல்லபுரம், உத்திரமேரூர், மதுராந்தகம், திருப்போரூர், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு, அரசு மற்றும் தனியார் பேருந்துகள் சென்று வருகின்றன. குறிப்பாக 10 நிமிடத்திற்கு ஒருமுறை செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்திலிருந்து தாம்பரத்திற்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோன்று தினமும் வேலைக்கு செல்பவர்களும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பேருந்து நிலையத்தை பயன்படுத்துகின்றனர். இந்த பேருந்து நிலையத்தில் பயணிகள் குடிக்க குடிநீர் இல்லாததால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர் இந்த பேருந்து நிலையத்திலிருந்து செங்கல்பட்டு நகராட்சி நமக்கு நாமே திட்டம் மற்றும் செங்கல்பட்டு வணிகர் சங்க பங்களிப்பு நிதியுடன் சேர்த்து 4 லட்சத்து 50000 ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை கடந்த ஆண்டு மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்த நிலையில் முறையான பராமரிப்பு இல்லாததால் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் முழுதும் தூசி படிந்து பாழடைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக பயணிகள் குடிநீரை அதிக விலை கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே பழுதடைந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் மேலும் கூடுதலாக குழாய்கள் அமைந்து தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பேருந்து நிலையத்தில் இலவச குடிநீர் தர வேண்டும் என்பது விதி, அதற்கும் சேர்த்து தான் பயண சீட்டுகள் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி பொதுமக்களுக்கு அடிப்படை வசதி செய்யாமல் ஏமாற்றும் அரசு எப்பொழுது நடவடிக்கை எடுக்கும் என கேள்வி எழுந்துள்ளது.
Next Story