வேளாண் பட்டம் படித்த இளைஞர்கள் தொழில்முனைவோராக வாய்ப்பு
Thirukoilure King 24x7 |31 July 2024 12:27 AM GMT
வாய்ப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள் வேளாண் தொழில் முனைவோர் ஆவற்கு வேளாண்துறை வாய்ப்பு வழங்குகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேளாண்மைத்துறையின் மூலம் மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின்கீழ் இளங்கலை பட்டப்படிப்பு படித்து, வேலை இல்லாத இளைஞர்களை, வேளாண் தொழில் முனைவோராக ஆக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் அக்ரி கிளினிக் அல்லது வேளாண் சார்ந்த தொழில் துவங்குவதற்கு பட்டதாரிகள் இருவருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் மானியம் வழங்குகிறது. பின்னேற்பு மானியமாக நிதி உதவி வழங்கப்படும். 21 முதல் 40 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் நிறுவனத்தில் பணியில் இருக்கக் கூடாது. விண்ணப்பதாரர் கணினி திறன் பெற்றிருக்க வேண்டும். ஒரு குடும்பத்திற்கு ஒரு பட்டதாரி மட்டுமே நிதி உதவி பெற தகுதியுடையவர் ஆவார். விண்ணப்பத்தினை விரிவான திட்ட அறிக்கையுடன் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம் மற்றும் சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். இத்தகவலை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.
Next Story