பயோடீசல் கொண்டு வந்த டேங்கர் லாரியை துரத்தி அடித்த மீனவர்கள்

X
தேங்காபட்டணம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன் பிடித்து தொழிலுக்கு செல்லும் விசைப்படகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் சட்ட விரோதமாக டேங்கர் லாரியில் பயோடீசல் கொண்டு வந்து விநியோகம் செய்ததாக புகார் எழுந்தது. இந்த பயோ டீசலை லாபம் கருதி வாங்கிய மீனவர்கள் தங்கள் விசைப்படகுகளுக்கு உபயோகித்த போது, விசைப்படகு எஞ்சின்கள் பழுதடைந்ததாக புகார்கள் எழுந்தன. இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் ஒரு டேங்கர் லாரியில் பயோ டீசல் இரயுமன்துறை பகுதியில் கும்பல் ஒன்று கொண்டு வந்து நிறுத்தியது. இதை பார்த்த அப்பகுதி மீனவர்கள் லாரியை அங்கிருந்து துரத்தினர். அந்த லாரியை மீண்டும் நேற்று காலை இரவிபுத்தன்துறை கிராமத்தில் அந்த கும்பல் கொண்டு வந்து நிறுத்தியது. பயோ டீசல் டேங்கர் லாரி நிற்பதை பார்த்த அப்பகுதி மீனவர்கள் இது சம்பந்தமாக மீன்வளத்துறை அதிகாரிகளுக்கும், கடலோர உளவு பிரிவு போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். இதையடுத்து கிள்ளியூர் தாசில்தார் ராஜசேகரன் நேரில் சென்று விசாரணை நடத்தினார். அப்போது பயோடீசல் ஒரு தனியார் நிறுவனத்திற்கு கொண்டு செல்வதற்கான ஆவணங்களை வைத்திருந்தனர். இதை அடுத்து அந்த நிறுவனத்தைத் தவிர வேறு எங்கும் பயோ டீசலை விற்ககூடாது என தாசில்தார் எச்சரிக்கை விடுத்தார். இதை அடுத்து அந்த லாரியை அந்த கும்பல் சின்னதுறை கிராம பகுதிக்கு கொண்டு சென்றது.
Next Story

