கரூரில் நள்ளிரவில் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவு.

கரூரில் நள்ளிரவில் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவு.
கரூரில் நள்ளிரவில் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவு. கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜய பாஸ்கர் மீது சுமார் நூறு கோடி ரூபாய் நில மோசடி வழக்கில் நேற்று இரவு நீதிபதி பரத்குமார் மறு உத்தரவு வரும் வரை நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். கரூரில் உள்ள மேல கரூர் பத்திரப்பதிவு அலுவலக சார்பதிவாளர் முகமது அப்துல் காதர் கரூர் காவல் நிலையத்தில், போலி பத்திர பதிவு செய்ததாக ஏழு பேர் மீது அளித்த புகாரில் கடந்த ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தனது பெயரையும் சேர்க்கப்படலாம் என்று எண்ணிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமின் கேட்டு தாக்கல் செய்து இரு மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதனால் தலைமறைவான விஜயபாஸ்கரை கேரளாவில் சிபிசிஐடி போலீஸ் சார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இதனிடையே சிபிசிஐடி காவல் துறையினரும், கரூர் மாவட்ட வாங்கல் காவல் நிலையம் சார்பிலும் எம் ஆர் விஜயபாஸ்கரை விசாரிக்க, கஷ்ட்டி கேட்டு விசாரித்து முடிந்த நிலையில், மூன்றாவது முறையாக ஜாமீன் கேட்டு எம் ஆர் விஜயபாஸ்கர் தரப்பில் தாக்கல் செய்த மனுவை இரண்டு நாட்களாக விசாரணை செய்த நீதிமன்றம் நேற்று இரவு 12 மணி அளவில் நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. இது தொடர்பாக நீதிபதி பரத்குமார் தெரிவித்த உத்தரவில், நீதிமன்றத்தில் ஜாமின் தொகையாக ரூபாய் 25 ஆயிரம் செலுத்த வேண்டும். நாள்தோறும் வாங்கல் காவல் நிலையத்தில் ஒருமுறையும், சிபிசிஐடி அலுவலகத்தில் காலை,மாலை என இரு வேலையும் கையெழுத்திட வேண்டும் என தெரிவித்து இருந்தார்.
Next Story