ஹாஸ்டல் பஸ் ஸ்டாப் அருகே குண்டும் குழியுமான சாலை தொடர் விபத்துக்கு ஏற்படுவதாக குற்றச்சாட்டு

காங்கேயம் ஹாஸ்டல் பஸ் ஸ்டாப் குண்டும் குழியுமான சாலை சீரமைக்கப்படுமா வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு. மேலும் தொடர்ச்சியாக விபத்து ஏற்படுவதாக குற்றச்சாட்டு
திருப்பூர் காங்கேயம் சாலையில் ஹாஸ்டல் பஸ் ஸ்டாப் அருகே சாலை குண்டும் குழியுமாக சேதமடைந்தும் அப்பகுதியில் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக சேதமான இந்த சாலையை அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. மேலும் தினசரி திருப்பூரிலிருந்து திருச்சி. கரூர். தஞ்சாவூர். புதுக்கோட்டை. அறந்தாங்கி ஊர்களுக்கு அதிகமாக இருசக்கர வாகனம் மற்றும் கனகர வாகனங்கள் இந்த சேதமடைந்த சாலையை கடந்து செல்லும் போது சாலை மேலும் சேதமடைந்து வருவதுடன் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசலும் 100க்கும் மேற்பட்ட சிறு சிறு வாகன விபத்துகளும் தொடர்ச்சியாக ஏற்பட்டு வருகின்றது. மேலும் இரவு நேரங்களில் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே சேதம் அடைந்த சாலையை சேதமடைந்த பகுதியிலாவது உடனடியாக செய்தமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும்  நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story