வேலகவுண்டம்பட்டி அருகே விவசாயி தற்கொலை.
Paramathi Velur King 24x7 |31 July 2024 6:49 AM GMT
வேலகவுண்டம்பட்டி அருகே விவசாயி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை.
பரமத்திவேலூர்,ஜூலை.31- நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டன்பட்டி அருகே உள்ள இரையம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி(77) விவசாயி. இவர் உடல் நிலை பாதிக்கப்பட்டு கடந்த ஐந்து வருடங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ராமசாமி கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ராமசாமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி சென்று பார்த்தபோது விஷம் அருந்தி உயிருக்கு போராடியது தெரியவந்தது. அதனையடுத்து அவரை காப்பாற்றி நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி ராமசாமி உயிரிழந்தார். இச் சம்பவம் குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து ராமசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story