அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச மரக்கன்று வழங்கும் நிகழ்வு

X
முத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு நடுநிலைப்பள்ளி, சின்ன முத்தூர் அரசு நடுநிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. விழாவில் ஒரு குடும்பம் மூன்று மரக்கன்றுகள் குழுவினர் மூலம் இலவசமாக பெறப்பட்ட நாவல், சீதா, மாதுளை, கொய்யா, பெரு நெல்லி என சுமார் 1600 மரக்கன்றுகள் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வேல்முருகன், அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை மேரி மலர் அரசி, சின்ன முத்தூர் அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி ஆகியோர் தங்கள் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு வரை பயிலும் 1200 மாணவ மாணவிகளுக்கு மரக்கன்றுகள் இலவசமாக வழங்கினார்கள். விழாவில் ஆசிரியர் ஆசிரியைகள் மாணவ,மாணவிகள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
Next Story

