ராஜ வாய்க்கால் கரையோரத்தில் மலைபோல் குவிக்கப்பட்டுள்ள குப்பைகள்.
Paramathi Velur King 24x7 |31 July 2024 8:43 AM GMT
பரமத்தி வேலூர் ராஜ வாய்க்கால் கரையோரத்தில் மலைபோல் குவிக்கப்பட்டுள்ள குப்பைகளால் சுகாதார சீர்கேடு.
பரமத்தி வேலூர் காவிரி பாலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வேலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட சாலையின் அருகே உள்ள ராஜ வாய்க்கால் கரையின் ஓரத்தில் மலை போல் குப்பைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. பரமத்தி வேலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சேரும் குப்பைகளை பேரூராட்சி நிர்வாகத்தினர் வாகனங்களில் கொண்டு வந்து ராஜா வாய்க்கால் கரைப்பகுதியில் குவித்து வைத்துள்ளனர். இந்த குப்பைகளை தீயிட்டு எரித்து வருவதால் அடுக்கடி அப்பகுதி முழுவதும் புகை மூட்டம் ஏற்பட்டு வாகனத்தில் செல்வோர் மிகவும் சிரமபட்டு வருகின்றனர். மேலும் அதில் ஏற்படும் புகையால் சுகாதார சீர்கேடு நிலை உள்ளது. அதிக அளவு குவிக்கப்பட்டுள்ள குப்பைகள்,எரிக்கப்படும் குப்பைகள் ராஜ வாய்க்காலில் சரிந்து விழுவதால் தண்ணீரில் அடித்துச் செல்லும் குப்பைகலாள் தண்ணீர் செல்வது தடைபடுவது மட்டுமல்லாமல் மருத்துவ கழிவு, கோழி கழிவுகள் , பாலிதீன் பைகள்,மது பாட்டில்கள்,பிளாஸ்ட்டிக் பாட்டில்கள் என பலகழிவுகளால் நிரம்பி துர்நாற்றமும் வீசுவது மட்டுமல்லாமல் அந்த தண்ணீர் விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாதவாறு மாசடைந்து வருகிறது. மேலும் அந்தத் தண்ணீர் உடலில் பட்டால் அரிப்பும் தோல் சம்பந்தப்பட்ட நோய்களும் வருகிறது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story