மத்திய பட்ஜெட்டின் நகல் எரிப்பு போராட்டம்
Perambalur King 24x7 |31 July 2024 8:48 AM GMT
போராட்டம்
பெரம்பலூரில் விவசாய விளைப்பொருட்களுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி கட்டுப்படியான விலை நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் மத்திய பட்ஜெட்டின் நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்ட ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் சார்பில் புதிய பேருந்து நிலையம் பகுதியில் மத்திய அரசின் பட்ஜெட்டின் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. விவசாய விளை பொருட்களுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி ஒன்றரை மடங்கு விலை நிர்ணயித்து சட்டம் இயற்றிடக்கோரியும், விவசாய கடன்களை ரத்து செய்திட வலியுறுத்தியும், மின்சாரத்தை கார்ப்பரேட்டுக்கு தாரை வார்ப்பதை கைவிட வேண்டியும், மாதம் தோறும் விவசாயிகளுக்கு பத்தாயிரம் ரூபாய் பென்ஷன் வழங்கிட கோரியும், பட்ஜெட்டில் விவசாயிகளை புறக்கணித்த மத்திய அரசை கண்டித்தும் பெரம்பலூரில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் அதன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்லதுரை தலைமையில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து பாதுகாப்பு போலீசார் அவர்களை தடுத்து கலைந்து போக செய்தனர். இந்நிகழ்ச்சியில் தமிழக விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அமைப்புகளின் பிரதிநிதிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story