பரமத்தி வேலூர் காவிரி கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை.
Paramathi Velur King 24x7 |31 July 2024 8:58 AM GMT
காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு காவிரி கரையோர பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த பரமத்தி வேலூர் பொதுப்பணித் துறையினர்.
மேட்டூர் அணை 120 அடியை எட்டப்பட்டு உள்ள நிலையில் மேட்டூர் அணையில் இருந்து தற்போது 80 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பரமத்திவேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட காவிரி கரையேர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு பரமத்தி வேலூர் பரமத்திவேலூர் பொதுப்பணித்துறையினர் காவல் துறையினர் காவிரியாற்றில் தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதால் காவிரியில் குளிப்பது, துணிகள் துவைப்பது உள்ளிட்டவைகளை தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் கர்நாடகா நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதையடுத்து மேட்டூர் அணையிலிருந்து 16 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. மேலும் மேட்டூர் அணையில் இருந்து படிப்படியாக தண்ணீர் திறக்கப்பட வாய்ப்புள்ளதால் பரமத்தி வேலூர் வட்டாரத்திற்கு உட்பட்ட சோழசிராமணி, ஜமீன்இளம்பள்ளி, ஜேடர்பாளையம், அய்யம்பாளையம், பிலிக்கல்பாளையம், பாண்டமங்கலம், வேலூர், அனிச்சம் பாளையம், நன்செய் இடையாறு மற்றும் மோகனூர் வரையிலான காவிரி கரையோர பகுதியில் உள்ள பொதுமக்கள் காவிரி ஆற்றில் இறங்கி குளிக்கவோ, துணிகள் துவைக்கவோ, நீச்சல் பழகவோ கூடாது. மேலும் மீனவர்கள் காவிரி ஆற்றில் பரிசலில் சென்று மீன் பிடிக்கவும்,விவசாயிகள் கால் நடைகளை குளிப்பாட்டுதல், மேச்சலுக்கு அழைத்துச் செல்லுதலுக்கும் தடை செய்யப்பட்டுள்ளதாக பரமத்திவேலூர் பொதுப்பணித்துறையினர் மற்றும் பரமத்திவேலுார் காவல்துறை உட்கோட்ட போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story