ராமநாதபுரம் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது

மாயாவளம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் கீழக்கரை வட்டாட்சியர் பங்கேற்பு.
பொதுமக்கள் இணையவழி வாயிலாக தற்போது பெற்று வரும் சேவைகளை விரைவாகவும் பல்வேறு துறைகள் மூலம் பெற்றுவரும் வெவ்வேறு சேவைகளை ஒரே இடத்திலும் பெறுவதற்கு தமிழக முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி மக்களுடன் முதல்வர திட்டம் தமிழக அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் மாயா குளம் ஊராட்சிக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட யில் உள்ள சமுதாய கூடத்தில் நடைபெற்ற ஊரக பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம் கீழக்கரை வட்டாட்சியர் ஜமால் முகமது வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஸ்வரி ஆகியோர் தலைமையில் இன்று நடைபெற்றது. இம்முகாமிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜுலு கலந்துகொண்டு துவங்கி வைத்தார். இம்முகாமில் கும்பிடு மதுரை பனையடி நீந்தல் வேளாண் ஊர் தில்லையனேந்தல் மற்றும் உட்பட சுற்று வட்டாரத்திலுள்ள கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டு மனுக்களை வழங்கினர். பொதுமக்கள் கொடுத்த புகார் மற்றும் கோரிக்கை மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
Next Story