நடுமுதலைக்குளம் கிராமத்தில் மாநில அளவிலான மாபெரும் கபடி போட்டி
Sholavandan King 24x7 |31 July 2024 1:36 PM GMT
பல மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள்
: சோழவந்தான் ஆகஸ்ட் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா-செல்லம்பட்டி ஒன்றியம்முதலைக்குளம் ஊராட்சி - நடுமுதலைக்குளம் கிராமத்தில் மாநில அளவில்- ஆண்கள்/பெண்கள் கபடி போட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க மாநில கௌரவ தலைவர் எம் பி ராமன் தலைமையில், விக்கிரமங்கலம் காவல்நிலைய சார்பு ஆய்வாளர் அசோக்குமார் முன்னிலையில், பெண்களுக்கான கபடி போட்டி தொடங்கியது மதுரை லேடி டோக் கல்லூரி மதுரை பாத்திமா கல்லூரி மணி வாட்டர் பெண்கள் கல்லூரி மதுரை மீனாட்சி பெண்கள் கல்லூரி ஆகிய கல்லூரி அணியின் கபடி போட்டி நடந்தது நிகழ்ச்சி நான்கு நாட்கள் தொடர்ந்து இரவு-பகலாக, நடந்தது 200-க்கும் மேற்பட்ட அணியினர் இருபாலர்கள் போட்டியில் கலந்து கொண்டனர். பெண்கள் அணியில் முதல் பரிசு 1) மணி வாட்டர் பெண்கள் கல்லூரி, 2) பாத்திமா கல்லூரி 3)லேடி டோக் கல்லூரி, 4)மீனாட்சி கல்லூரி,5)அமெரிக்கன் கல்லூரி கபடி அணியினர் வெற்றி பெற்று ரூ.50ஆயிரத்தில் இருந்து, பல லட்சம் பரிசுப் பொருட்கள் மற்றும் வெற்றி கேடயம் வழங்கப்பட்டது. முதலைகுளம் கிராமமேவிழா, கோலாகலமாக காட்சியளித்தது. இதில் தமிழகம் பல மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள் பார்வையாளர்கள் பல கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு வீரர்களை உற்சாகப்படுத்தினர் மாநில அளவிலான நடந்த கபடி போட்டி விழா ஏற்பாடுகளை நடு முதலைக்குளம் இளைஞர் மன்றம் பதினெட்டாம்படியான் கருப்புசாமி கபடி குழுவினர் ஜல்லிக்கட்டு பேரவை மற்றும் கிராம பொதுமக்கள் சார்பில் கபாடி போட்டி விழா நடந்தது
Next Story