மதுரை திருநகரில் புதியதாக உதயமானது அம்மன் உணவகம்

உரிமையாளரும் நடிகருமான சூரி திறந்து வைத்து சிறப்பித்தார்
மதுரையில் மீண்டும் ஒரு உணவகத்தை ஆரம்பித்த நடிகர் சூரி நடிகர் சூரி மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே சொந்தமாக அம்மன் உணவகம் என்கிற பெயரில் 10க்கும் மேற்பட்ட உணவகங்களை நடத்தி வருகிறார். அந்த வகையில் மதுரை திருப்பரங்குன்றம் அருகே திருநகர் பகுதியில் புதிதாக மேலும் ஒரு உணவகத்தை துவக்கி திறந்து வைத்துள்ளார். மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் உள்ள கேண்டினும் சூரிக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் திருப்பரங்குன்றம் முன்னாள் எம்எல்ஏ டாக்டர் சரவணன், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் உசிலை சிவா மற்றும் அரசியல் பிரமுகர்கள் தொழிலதிபர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
Next Story