மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் முப்பெரும் விழா.
Paramathi Velur King 24x7 |31 July 2024 2:01 PM GMT
பரமத்தி வேலூர் வட்டம் பொத்தனூரில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் முப்பெரும் விழா நடைபெற்றது.
நாமக்கல் மேற்கு மாவட்டக் கழகம் சார்பில் மதிமுக 30 ஆண்டுகளைக் கடந்து வெற்றிகரமாக 31ம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி மற்றும் துரைவைகோ பாராளுமன்ற தேர்தலில் வெற்றி விழா நிகழ்ச்சியும் மாவட்ட முழுவதும் புதிய கொடிக்கம்பங்களை நிறுவி அதில் இரு வர்ண கொடிகளை ஏற்றும் நிகழ்ச்சி என முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு மதிமுக மேற்கு மாவட்ட செயலாளர் கே.கே கணேசன் தலைமை தாங்கினார். மதிமுக மாநில கொள்கை விளக்க அணி செயலாளர் வந்திய தேவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மேற்கு மாவட்டம் முழுவதும் புதிதாக நிறுவியிருந்த கொடிக்கம்பங்களில் கொடியேற்றி சிறப்புரை ஆற்றினார். முன்னதாக நாமக்கல் மாவட்ட எல்லையான குமாரபாளையத்தில் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்பொழுது அவர் கூறுகையில் மதிமுக 31 ஆண்டுகள் தொடக்க விழா மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. மதியம்12 மணிக்கு ஆரம்பித்து வழிநெடுக 20 இடங்களில் கழக கொடிகளை ஏற்றி இரவு பொத்தனூரில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசியதாவது நாங்கள் பதவி கிடைக்கும் என்று இந்த இயக்கத்திற்கு வரவில்லை பதவி கிடைத்தவர்கள் எல்லாம் சுகத்தை அனுபவித்து விட்டு சென்று விட்டார்கள் போற்றுதலுக்குரிய பொதுச் செயலாளர் வைகோ எம்.பி அவர்களின் கரத்தை வலுப்படுத்தவே நாங்கள் இந்த இயக்கத்திற்காக பாடுபட்டு வருகிறோம். தமிழகத்தில் எத்தனையோ கட்சி ஆரம்பித்தார்கள் ஆனால் இன்று வரை தாக்குப் பிடிக்க முடியாமல் காணாமல் போய்விட்டது ஆனால் இந்த மதிமுக இயக்கம் தான் தொடர்ந்து வெற்றி நடை போடுகிறது கட்சிக்கு இளம் இரத்தம் காய்ச்சப்பட்டுள்ளது அவர்தான் துரைவைகோ எம் பி அவர்கள் வழிகாட்டுதலின்படி இனிமேல் வருங்காலங்களில் கட்சி வளர்ச்சி பாதையை நோக்கி செல்லும் கட்சியில் முதியவர்களும் இளைஞர்களும் ஒன்று சேர்ந்து செயல் திட்டங்களை இந்த தமிழக மக்களின் நலனுக்காக மதிமுக என்றென்றும் செயல்படும் என்று சிறப்புரையாற்றினார். மேலும் இந்த முப்பெரும் விழாவில் கலந்து நாமக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளர் கே.கே. கணேசன். மேற்கு மாவட்ட மாநில, மாவட்டநிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள் நகர செயலாளர்கள், பேரூர் கழகச் செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் மாணவர் அணி, மகளிர் அணி, தொண்டர்கள் பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.
Next Story