வெள்ளகோவில் அருகே மயானங்கள் ஆக்கிரமிப்பு வட்டாட்சியர் பேச்சுவார்த்தை

வெள்ளகோவில் அருகே மயானங்களை ஆக்கிரமிப்பு செய்யும் திமுக நிர்வாகிகள் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு - வட்டாட்சியரிடம் பேச்சுவார்த்தை 
வெள்ளகோவில் அருகே உத்தமபாளையம் ஊராட்சி மீனாட்சிபுரம் பகுதியில் 100க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நத்தம் புறம்போக்கில் சுமார் 5சென்ட் அளவுள்ள சுடுகாடு என்கின்ற மயானம் இருந்துள்ளது. இந்த மயானத்தை சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தி வருகின்றனர். இதே மயானத்தில் தான் இவர்களுடைய முன்னோர்களை அடக்கம் செய்தும் உள்ளனர். இந்த நிலையில் இந்த மயான ம் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்தின் உரிமையாளர் ஒரே நாளில் ஜேசிபி இயந்திரத்தை கொண்டு அப்பகுதியை சமதளமாக நிரவியும் அங்கு புதைக்கப்பட்ட சடலங்களின் எலும்புகளையும் அப்புறப்படுத்திவிட்டு பின்னர் கற்கள் நட்டி கம்பி வேலி போட்டு ஆக்கிரமித்து உள்ளனர். இது குறித்து அவர்களிடம் நேரில் சென்று கேட்கும் போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் 5க்கும் மேற்பட்ட முறை மாவட்ட ஆட்சியர் மூலம் 10க்கு மேற்பட்ட முறை காங்கேயம் வட்டாட்சியிடமும் புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டுகின்றனர்.  பின்னர் கடந்த மாதம் நடைபெற்ற ஜமாபந்தியில் மீண்டும் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டதை தொடர்ந்து பின்னர் நேரில் சென்று வட்டாட்சியர் மற்றும் நில அளவியர்கள் சென்று கடந்த வாரத்தில் அளவீடு செய்த போது அது பொதுப் பணித்துறைக்கு சொந்தமான இடம் என வட்டாச்சியர் தெரிவித்த நிலையில் தோட்டத்தின் உரிமையாளர் கற்கள் நட்டி கம்பி வேலி அமைத்ததை அப்புறப்படுத்தவில்லை.  மேலும் இது குறித்து வட்டாட்சியரிடம் கேட்கும் பொழுது அளவீடு செய்ய மட்டும் தான் முடியும் கற்கள் மற்றும் கம்பி வேலிகள் நாங்கள்  அப்புறப்படுத்த மாட்டோம் என தெரிவித்துவிட்டார். பின்னர் பொதுமக்கள் வசித்து வரும் பகுதி சட்டத்துக்கு புறம்பாக உள்ளது என்று தோட்டத்தில் உரிமையாளரின் உறவினர் போட்ட மனுவுக்கு தற்போது அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும் அளவீடு செய்வதாக வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக பொதுமக்கள் காவல்துறையில் அனுமதி வழங்க மனுவழங்கிய நிலையில் போராட்டம் நடத்தவேண்டும் இன்று இரு தரப்பினர் இடையே தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்த வட்டாட்சியர்  அலுவலகத்திற்கு வர கூறியிருந்தனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தினார் இந்த பேச்சுவார்த்தையில் பொதுமக்கள் திருப்தி அடையவில்லை. செய்தித்துறை அமைச்சர் அலுவலகத்தில் இருந்து உங்களுக்கு உத்தரவிட்டுள்ளனர் அதனால் நீங்கள் திமுக நிர்வாகியை தோட்டத்தின் உரிமையாளருக்கு ஆதரவாக பேசுவதாகவும் பொதுமக்கள் வட்டாட்சியரிடம் முறையிட்டனர். மேலும் இதே மீனாட்சிபுரம் அருகே மீனாட்சிபுரம் காலனி பகுதியில் உள்ள அருந்ததியர் மக்களின் மயானத்தையும் ஜேசிபி இயந்திரம் வைத்து அப்புறப்படுத்தியதாக திமுக நிர்வாகிகள் மீது அருந்ததியர் சமுதாய மக்களும் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். தற்போது இரண்டு மயானங்களையும் ஆக்கிரமிப்பு உள்ள நிலையில் ஏதாவது இறப்பு சம்பவம் நடைபெற்றால் என்ன செய்வது என்று தெரியவில்லை என்று பொதுமக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பொதுமக்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளார்.
Next Story